தூத்துக்குடி கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது !

தூத்துக்குடி கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது !

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் குறுக்கு சாலையில் அமைந்துள்ள கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 11.08.2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.30 மணியளவில் போதைப்பொருளின் தீய விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகழூ மாணவ மாணவியர்கள் குறுக்குச்சாலையில் போதை ஒழிப்பு பதாகைகள் கையில் ஏந்திச் செல்லும்ழூ பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.

ஓட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர் கார்த்திக், காவலர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களுடன் நாட்டுநலப் பணித்திட்ட மாணவர்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.

இதன் தொடர்ச்சியாக காலை 10.00 மணியளவில் கல்லூரி கலையரங்கத்தில் வைத்து முதல்வர் முனைவர்.இளங்குமரன் தலைமையில் போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது. போதைப் பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்தும்ழூ விழிப்புணர்வை ஏற்படுத்தவும்ழூ இளைஞர்களிடையே ஆரோக்கியமான வாழ்விற்குழூ போதை இல்லாத வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும் மாநிலம் தழுவிய முயற்சியின் ஒரு பகுதியாக இந்த உறுதிமொழி அமைந்தது.

உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியில் 125 மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றுக் கொண்டனர். மாணவர்கள் அனைவரும் கொடுக்கப்பட்ட இணைப்பு மூலம் தங்கள் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.