கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி நிகழ்ச்சி !
கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) மற்றும் போதைப்பொருள் தடுப்புக் குழு(Anti Drug Club)சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் விஜயன் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர்.பிரபு ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்கள் போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தனர்.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி நிகழ்வு நேரடி காணொளி வாயிலாக மாணவர்களுக்கு ஒளிபரப்பப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கல்லூரியில் 160 மாணவர்கள் கலந்து கொண்டு போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் உடல், மனநலம், கல்வி மற்றும் சமூக பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதில் மாணவர்களின் பங்களிப்பு மற்றும் பொறுப்புணர்வு குறித்து வலியுறுத்தப்பட்டது.
நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் மின்னணு பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதன் மூலம் மாணவர்கள் மற்றும் பங்கேற்பாளர்களின் விழிப்புணர்வு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் நிகழ்ச்சி அமைந்தது.

இந்நிகழ்ச்சியை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கீதாராணி ஒருங்கிணைத்தார். போதைப்பொருள் தடுப்புக் குழு உறுப்பினர்களான லாவண்யா, முத்து ராஜா மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
மாணவர்களின் ஆர்வமிக்க பங்கேற்புடன் நிகழ்ச்சி நடைபெற்றது. போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆரோக்கியமான மற்றும் போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டை மாணவர்கள் வெளிப்படுத்தினர்.












