தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் தொழில்முனைவு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது :

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் தொழில்முனைவு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது :

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) நிறுவனத்தின் நிறுவனப் புதுமை மன்றம் (Institution’s Innovation Council – IIC) மற்றும் தொழில்முனைவு மேம்பாட்டு மையம் (Entrepreneurship Development Cell – EDC) ஆகியவை, யங் இந்தியன்ஸ் (Young Indians – Yi) அமைப்புடன் இணைந்து, “Think Like a Founder: Turning Ideas into Business” என்ற தலைப்பில் தொடக்க விழா மற்றும் வழிகாட்டல் நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 3) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை, கல்லூரி ஸ்டார் ஹாலில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் ஸ்டுடியோ சினியாஸ்டா நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் கிரியேட்டிவ் இயக்குநர் வருண் அரவிந்த், யங் இந்தியன்ஸ் (Yi) தலைவர் பிரேம் பால் நாயகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, மாணவிகளுக்கு தொழில்முனைவு, புதுமை சிந்தனை மற்றும் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர்.சிபானா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை முனைவர்.காயத்ரி, முனைவர்.டஃபோடில் டி’அல்மெய்டா மற்றும் முனைவர்.கீதா மகேஸ்வரி ஆகியோர் மேற்கொண்டனர்.

தொழில்முனைவு மற்றும் புதுமை சிந்தனையை மாணவர்களிடையே ஊக்குவிக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.