தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் “நஸ்முக்ட் யுவா” விக்சிட் பாரத் 2047 நிகழ்ச்சி :மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டார் !

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் “நஸ்முக்ட் யுவா” விக்சிட் பாரத் 2047 நிகழ்ச்சி :

மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டார்!

மை பாரத் கேந்திரா மற்றும் தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி இணைந்து நடத்திய “நஸ்முக்ட் யுவா” – விக்சிட் பாரத் 2047 நிகழ்வு 01.08.2026 சனிக்கிழமை வ. உ. சிதம்பரம் கல்லூரியில் வைத்து நடைபெற்றது.

போதை பொருள் ஒழிப்பை மையப்படுத்திய பேச்சுப்போட்டி, ஊமை நாடகம் போட்டி, நாட்டுப்புற நடன போட்டி வாசகம் எழுதுதல் போட்டி, கவிதை வாசித்தல் போட்டி, குறும்படம் இயக்குதல் போட்டி, குழு பாடல் போட்டி, ஓவிய போட்டி உள்ளிட்ட 8 கலை போட்டிகள் நடைபெற்றன.

விழாவை தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்து போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி அனைவரும் கூட்டாக எடுத்துக் கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கல்லூரி மாணவ மாணவியர் திரளாக போட்டிகளில் கலந்து கொண்டனர். நிறைவு விழாவில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். வெள்ளியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றோருக்கு பரிசுகளை வழங்கினார்.

நிகழ்வில் வ. உ. சிதம்பரம் கல்லூரி பொறுப்பு முதல்வர் முனைவர்.வள்ளியம்மாள், வ. உ. சிதம்பரம் கல்லூரி சுயநிதி பிரிவு இயக்குநர் முனைவர் ஜான் பிரின்ஸ் சௌந்தரநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். தூத்துக்குடி மாவட்ட இளைஞர் அலுவலர் ஞானச்சந்திரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

வ.உ. சிதம்பரம் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் ஆரோக்கிய செல்வ சுந்தரி நிகழ்வை ஒருங்கிணைத்து நன்றியுரை கூறினார்.

குறிப்பு:-

“விக்சிட் பாரத் 2047′ (Viksit Bharat 2047) என்பது இந்தியா ஙசுதந்திரம் அடைந்த 100வது ஆண்டான 2047-ம் ஆண்டுக்குள், நாட்டை முழுமையான வளர்ந்த நாடாக மாற்றும் இந்திய அரசின் தொலைநோக்குத் திட்டமாகும். இது பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம், நல்ல நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை இலக்காகக் கொண்டது.