தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) சுயநிதிப் பிரிவின் வெள்ளி விழா துவக்க நிகழ்ச்சி :

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) சுயநிதிப் பிரிவின் வெள்ளி விழா துவக்க நிகழ்ச்சி :

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) சுயநிதிப் பிரிவின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா துவக்க விழா இன்று (30.07.2026) காலை 11.00 மணிக்கு கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது .

“நம்பிக்கையும் சிறப்பும் மிளிரும் பாரம்பரியம்” என்ற கருப்பொருளில் நடைபெறும் இவ்விழாவில், செர்வைட் மாகாணத் தலைவர் அருட்சகோதரி முனைவர். மேரி ஜாய்ஸ் பேபி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்தார்.

இவ்விழாவிற்கு கல்லூரியின் செயலாளர் அருட்சகோதரி முனைவர்.குழந்தை தெரஸ், முதல்வர் அருட்சகோதரி முனைவர்.சிபானா, துணை முதல்வர் அருட்சகோதரி முனைவர். எழிலரசி மற்றும் சுயநிதிப் பிரிவு இயக்குநர் அருட்சகோதரி முனைவர்.ஆரோக்கிய ஜெனீசியஸ் அல்போன்ஸ் ஆகியோர் தலைமையேற்று நடத்தினார்.

மேலும், கல்லூரியின் முன்னாள் செயலாளர்கள், முன்னாள் முதல்வர் ஜெசி பெர்ணடோ , சுயநிதிப் பிரிவின் முன்னாள் இயக்குநர்கள், பழைய மாணவர்கள், நலவிரும்பிகள் மற்றும் மாணவ, மாணவியர் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

25வது ஆண்டு மலர் வெளியிடப்பட்டது .தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த வெள்ளி விழா துவக்க நிகழ்ச்சி, சுயநிதிப் பிரிவின் 25 ஆண்டுகால கல்விச் சேவையை நினைவுகூரும் வகையில் நடைபெற்றது.