அக்டோபர் 2 ல் நடைபெற இருந்த கிராமசபை கூட்டம் அக்டோபர் 11ம் தேதிக்கு மாற்றம்
விஜயதசமி பண்டிகை காரணமாக அக்டோபர் 2 அன்று நடைபெற வேண்டிய கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன
இவற்றில் ஊரக வளர்ச்சித்துறை வழிகாட்டுதல்படி குடியரசு தினம் சுதந்திர தினம், மே தினம் மற்றும் காந்தி ஜெயந்தி உட்பட பல்வேறு நாட்களில் கிராம சுவை கூட்டம் நடத்தப்படுகிறது.

இதில் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
அதன்படி காந்தி ஜெயந்தி நினைவு தினமான வரும் அக்டோபர் 2 ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.ஆனால் இந்த ஆண்டு அதே நாளில் விஜயதசமி பண்டிகை வருவதனால் அன்றைய தினம் நடக்க இருந்த கிராமசபை கூட்டம் ரத்து செய்யபட்டு இதற்கு மாற்றாக அக்டோர் 11ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த ஊரக வளர்ச்சி துறை முடிவெடுத்துள்ளது.












