கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
முன்னாள் மாணவர் சங்கம்
மற்றும் முன்னாள் மாணவி ஊக்கமளிக்கும் சிறப்புரை !
கோவில்பட்டியில் கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் ஆங்கிலத் துறை சார்பில், “இலக்கிய மாணவரிடமிருந்து கல்வியாளராக: கற்றல், தலைமைத்துவம் மற்றும் தொழில்முனைவோர் பயணம்” என்ற தலைப்பில் முன்னாள் மாணவி ஊக்கமளிக்கும் சிறப்புரை நிகழ்ச்சி சனிக்கிழமை (25.07.2026) காலை 10 மணியளவில் கல்லூரி மினி அரங்கில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, கல்லூரியின் 2016–2019 ஆம் ஆண்டு முன்னாள் மாணவியும், Growskill Academy நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான, ஜமால் முகமது பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியரும், தொழில் மற்றும் தன்னம்பிக்கை மேம்பாட்டு பயிற்சியாளருமான கவுசல்யா பங்கேற்று மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார்.

தனது உரையில், ஒரு இலக்கிய மாணவியாக இருந்து கல்வியாளர், தொழில்முனைவோர் மற்றும் தலைமைத்துவ பயிற்சியாளராக உயர்ந்த தனது வாழ்க்கைப் பயணத்தை பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து கற்றல், சிறந்த தகவல் தொடர்புத் திறன், தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு, தொழில்முனைவு சிந்தனை மற்றும் உயர்கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மாணவர்கள் தங்களின் திறமைகளை அறிந்து இலக்கை நோக்கி விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும் என்றும் ஊக்கமளித்தார்.

நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்கள் கலந்துரையாடலில் ஆர்வமுடன் பங்கேற்று, தொழில் வாய்ப்புகள், உயர்கல்வி மற்றும் தனிமனித வளர்ச்சி தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு விளக்கங்களைப் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் ஆங்கிலத் துறை மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். கல்லூரி நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் இறுதியில் மாணவி சுஜா நன்றி தெரிவித்தார்.












