சர்வதேச சதுரங்க தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் சதுரங்க போட்டி :
சர்வதேச சதுரங்க தினத்தை முன்னிட்டு, 21.07.2026 அன்று வ.உ. சிதம்பரம் கல்லூரியில் ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கான உள்ளக சதுரங்கப் போட்டி (Intramural Chess Competition) நடைபெற்றது.
இப்போட்டியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 74 மாணவர்களும், 23 மாணவிகளும் பங்கேற்றனர்.
நிறைவு விழாவில் சுயநிதிப் பாடப்பிரிவுகளின் இயக்குநர் டாக்டர். ஜான் பிரின்ஸ் சௌந்தரநாயகம் சிறப்புரையாற்றி, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

போட்டி முடிவுகள் :
ஆண்கள் பிரிவு :
முதல் பரிசு :
வரதராஜ பெருமாள் – இளநிலை மூன்றாம் ஆண்டு கணிதம்
இரண்டாம் பரிசு :
சூர்யா – இரண்டாம் ஆண்டு வணிகவியல் (பிரிவு II)
மூன்றாம் பரிசு :
மகாராஜா – இளநிலை முதலாம் ஆண்டு வணிக நிர்வாகவியல்
பெண்கள் பிரிவு :
முதல் பரிசு :
மேதா – இளநிலை முதலாம் ஆண்டு கணினி அறிவியல் (AI & ML)
இரண்டாம் பரிசு :
மேனகா – இளநிலை முதலாம் ஆண்டு ஆங்கிலம்
மூன்றாம் பரிசு :
லட்சுமி லாவண்யா – இளநிலை மூன்றாம் ஆண்டு நிலத்தியல்.












