கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வினாடி – வினா போட்டி !
கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், UCAS Quiz Club சார்பில் வணிகவியல் மற்றும் கணினி அறிவியல் துறைகள் இணைந்து நடத்திய துறைவாரியான வினாடி – வினா (Inter Departmental Quiz Competition) போட்டி நடைபெற்றது.
முன்னதாக நடைபெற்ற ஆரம்பச் சுற்றில் (Preliminary Round) பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் 60கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் இரண்டு பேர் கொண்ட அணிகளாக ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஐந்து அணிகள் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றன.
இறுதிச்சுற்றில் மாணவர்கள் பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள், அறிவியல், வரலாறு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தங்களது அறிவாற்றலை வெளிப்படுத்தினர்.
போட்டியை ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் சண்முகப்பிரியா வினாடி – வினா ஒருங்கிணைப்பாளராக நடத்தினார். கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் சரண்யா மதிப்பெண் பதிவாளராக (Scorer) செயல்பட்டார்.
நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் விஜயன் ஆலோசனையின் பெயரில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர். பிரபு தலைமை வகித்து மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
போட்டியில் மூன்றாம் ஆண்டு பி.காம். (Corporate Secretaryship) மாணவர்கள் மாதன் மற்றும் கண்ணன் ஆகியோர் முதல் பரிசை வென்றனர். ஜாய்லின் கிஃப்டி (பி.எஸ்சி (ஏஐ)), அபிவர்ஷினி (பி.எஸ்சி (சிஎஸ் & ஐடி)) இரண்டாம் பரிசை பெற்றனர். மூன்றாவது பரிசினை வணிகவியல் துறை மாணவிகள் காளியம்மாள், முனீஸ்வரி ஆகியோர் பெற்றனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை UCAS Quiz Club ஒருங்கிணைப்பாளர் முத்து ராஜா வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர், மற்றும் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினர்.












