தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி மற்றும் தூய பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப் பள்ளி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து !

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி மற்றும் தூய பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப் பள்ளி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து !

தூத்துக்குடி, வ.உ.சிதம்பரம் கல்லூரி, மற்றும் தூத்துக்குடி, தூய பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளி, ஆகிய கல்வி நிறுவனங்களுக்கிடையே, மாணவர்களின் முன்னேற்றம் மற்றும் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் (17.07.2026 – வெள்ளிக்கிழமை) புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடப்பட்டது.

இந்நிகழ்வு, மாவட்டத்தில் பள்ளிக் கல்விக்கும் உயர்கல்விக்கும் இடையிலான கல்விசார் இணைப்பை வலுப்படுத்தும் முக்கியமான முன்னெடுப்பாக அமைந்தது.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தம், தலைமை ஆசிரியர் அருட்தந்தை அமல்ராஜ் எஸ்.ஜே. மற்றும் தாளாளர் அருட்பணி முனைவர் பிரான்சிஸ் சேவியர் எஸ்.ஜே. ஆகியோர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.

இந்நிகழ்வில், தூய பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் வ.உ.சிதம்பரம் கல்லூரியின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்களும் கலந்து கொண்டு, மாணவர் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட இக்கூட்டு முயற்சிக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.


இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம், தூய பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வி மற்றும் எதிர்கால தொழில் வாய்ப்புகளுக்குத் தயாராக முழுமையான வழிகாட்டுதலும் ஆதரவும் வழங்குவது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.

இதன் முக்கிய அம்சங்களாக கல்வி மேம்பாடு, தொழில் வழிகாட்டுதல், திறன் மேம்பாடு மற்றும் கல்லூரி நிலைக் கல்விச் சூழலை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துதல் ஆகியவை இடம்பெறுகின்றன.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், வ.உ.சிதம்பரம் கல்லூரி பேராசிரியர்கள் IX முதல் XII வகுப்பு மாணவர்களுக்காக சிறப்பு சொற்பொழிவுகள், பயிற்சிப் பட்டறைகள் மற்றும் பாலப்பாடநெறிகளை (Bridge Courses) நடத்துவார்கள். மேலும், தொழில் வழிகாட்டுதல், திறனறித் தேர்வு (Aptitude) பயிற்சி மற்றும் உயர்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம், மாணவர்கள் தங்களது கல்வி மற்றும் தொழில் பாதையை தெளிவாகத் தேர்ந்தெடுக்க உதவிகள் வழங்கப்படும்.