குரூப் 1 முதல்நிலை தேர்வு தேதி மாற்றம் : டிஎன்பிஎஸ்ஸி அறிவிப்பு!

குரூப் 1 முதல்நிலை தேர்வு தேதி மாற்றம் :
டிஎன்பிஎஸ்ஸி அறிவிப்பு!

செப்டம்பர் 6 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவித்திருந்த குரூப் 1 முதல் நிலைத்தேர்வு வேறு தேதிக்கு மாற்றி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

குரூப் 1 பதவிகளை நிரப்புவதற்கான முதல் நிலைத் தேர்வுக்கான கால அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி வெளியிட்டிருந்தது.

அப்போது வெளியிட்டிருந்த அறிவிப்பின்படி, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் – குரூப் 1க்கான முதல்நிலை தேர்வு செப்டம்பர் 6 ஆம் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்டது. மேலும், முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஜூன் 30 ஆம் தேதி முதல் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான இணையதளத்தை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் திறந்தது. இந்த மாதம் 29ஆம் தேதி இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.