கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒருநாள் சமூக அறிவியலுக்கான புள்ளியியல் தொகுப்பு (SPSS) மென்பொருள் பயிலரங்கம் நடைபெற்றது!

கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒருநாள் சமூக அறிவியலுக்கான புள்ளியியல் தொகுப்பு (SPSS) மென்பொருள் பயிலரங்கம் நடைபெற்றது!

கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் (தொழில்சார் கணக்குவைப்பு முறை) துறை சார்பில் 09.07.2026 அன்று சமூக அறிவியலுக்கான புள்ளியியல் தொகுப்பு (SPSS) மென்பொருள் குறித்த ஒருநாள் பயிலரங்கம் கல்லூரியில் நடைபெற்றது.

இப்பயிலரங்கினை கல்லூரி முதல்வர் தலைமை வகித்து துவங்கி வைத்தார். துறைத் தலைவர் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.

சிறப்பு விருந்தினராக முனைவர். செல்லதுரை, உதவி பேராசிரியர், வணிகவியல் (CA) துறை, சிவகாசிஅய்யா நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, கலந்து கொண்டு, மென்பொருளின் அடிப்படை அம்சங்கள், தரவு உள்ளீடு, புள்ளியியல் பகுப்பாய்வு, பல்வேறு சோதனைகள் மற்றும் ஆய்வறிக்கை தயாரிப்பில் அதன் பயன்பாடுகள் குறித்து செய்முறை விளக்கங்களுடன் பயிற்சி அளித்தார்.

இப்பயிலரங்கில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி முதல்வர், துறைத் தலைவர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.