கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போலியோ சொட்டு மருந்து முகாம் !
1995 ல், இந்திய அரசு, உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெஃப் மூலம் 5 வயதுக்கு உட்பட்ட எல்லா குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து போலியோவை ஒழிக்க வேண்டும் என்ற தோக்கத்தில் கொண்டு வரப்பட்டது இத்திட்டம்.
மார்ச், 2014ல் உலக சுகாதார அமைப்பு இந்தியாவை போலியோ- இல்லாத நாடு என்று அறிவித்தது .

2014-க்கு முன்பு உலகத்தில் 60% போலியோ கேஸ் இந்தியாவில் இருந்ததாகவும், இப்போது போலியோ இல்லாத நாடாக இருப்பதாகவும் தெரிய வருகிறது.
இன்னும் சில நாடுகளில் போலியோவின் தாக்கம் இருப்பதால், அங்கிருந்து வராமல் தடுப்பதற்காகத்தான் இந்தியாவில் தொடர்ந்து இந்த முகாம் செயல்பட்டுவருகிறது.

தற்போது
“ஒரு துளி,
வாழ்க்கை முழுக்க பாதுகாப்பு”
என்ற தாராக மந்திரத்தோடு
0-5 வயசு வரை எல்லா குழந்தைகளுக்கும் ஏற்கனவே போட்டிருந்தாலும் திரும்பவும் போலியோ சொட்டு மருந்து போட வேண்டும்.

இதனை முன்னிட்டு கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி நிர்வாகக் குழுவின் ஆலோசனைப்படி குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. பள்ளி முதல்வர் பிரபு முகாமை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கோவில்பட்டி ஊரணி தெரு ஆரம்ப சுகாதார மையத்தின் செவிலியர் முத்துலட்சுமி, ஆசிரியர்கள் சத்யா,அல்மிர்ஷா கனி, பரமேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

காமராஜர் சொன்ன மாதிரி “குழந்தைகள் நலமா இருந்தாதான் நாடு நலமா இருக்கும். மதிய உணவு திட்டம் மாதிரி, போலியோ சொட்டு மருந்தும் குழந்தைகள் நலனுக்குதான்.













