கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தீயணைப்பு பேரிடர் பயிற்சி மற்றும் மீட்பு விழிப்புணர்வு கருத்தரங்க பயிற்சி!

கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் அணி -007 சார்பாக இன்று தீயணைப்பு, பேரிடர் பயிற்சி மற்றும் மீட்பு பணிகள் விழிப்புணர்வு கருத்தரங்கம் முதல்வர் ஜெயா (மு.கூ.பொ) தலைமையில் நடைபெற்றது.
ஆங்கிலத்துறை தலைவர் முனைவர்.ராம்சங்கர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர். ராஜேஷ் கண்ணா அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் கடையநல்லூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் ஷேக் அப்துல்லா மற்றும் நிலைய அலுவலர் (பயிற்சி)நந்தினி ஆகியோர் தமது குழுவினருடன் வந்திருந்து மாணவ மாணவிகளுக்கு பேரிடர் கால மீட்பு பயிற்சிகள் விழிப்புணர்வு மற்றும் பல்வேறு வகையான இடர்பாடுகளை கையாளுவது எப்படி அவசரகால உதவி எண்கள் குறித்தும் மாணவர்களிடையே விழிப்புணர்வு பயிற்சி ஏற்படுத்தி கருத்துரையும் வழங்கினர்.

மேலும் கருத்துரை வழங்கியும் கள பயிற்சியும் வழங்கினார்கள்.இதில் இயற்கை வாயு சீற்றம் கட்டுப்படுத்துவது எப்படி வெள்ள இடர்பாடுகளில் மீட்பது, தயார் நிலையில் இருப்பது எப்படி என்பது குறித்தும் வாயுக்களை திறந்து வணிக வளாகங்களில் இடர்பாடு காலங்களில் பயன்படுத்துவது எப்படி என்றும் விரிவாக விளக்கிக் கூறினர்.

நிகழ்ச்சியில் இறுதியாக நாட்டு நல பணி திட்ட அலுவலர் முனைவர்.பால் மகேஷ் நன்றி உரை கூறினார். இதில் திரளான மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர். பல்வேறு கள பயிற்சிகளை தீயணைப்பு வீரர்களான பால்ராஜ், ஜெயசீலன், சிந்தன்,பால்ராஜ், நம்பிராஜன், கணேஷ் கண்ணன், சங்கர செல்வம், தங்கராஜ் ஆகியோர் கலந்துகொண்டு மாணவ,மாணவிகளுக்கு நிலைய அலுவலர் மற்றும் நிலைய பயிற்சி அலுவலருடன் இணைந்து செய்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் பால் மகேஷ் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகளுடன் ஏற்பாடு செய்திருந்தார்.













