- தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் துறைகளுக்கிடையேயான “ENG-FEST ’26” போட்டிகள்
தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியின் ஆங்கிலத்துறை மற்றும் ஆங்கில இலக்கியப் பேரவை இணைந்து “ENG-FEST ’26” – துறைகளுக்கிடையேயான போட்டிகளின் நிகழ்ச்சியை நடத்தினர்.
இறைவணக்கப் பாடலுடன் இந்நிகழ்ச்சிதொடங்கியது. ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர் பிரியா வரவேற்புரை வழங்கினார்.

கல்லூரி முதல்வர் முனைவர்.கனகராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் முனைவர். விஜயலெட்சுமி, கல்லூரி நூலகர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். போட்டிகளுக்கான நடுவர்களாக நிலா கல்வி மையத்தின் நிறுவனர் சூர்யா மற்றும் சத்யா பள்ளியின் கல்வி ஒருங்கிணைப்பாளர் தீபிகா சோனா ஜாய் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பல்வேறு துறைகளுக்கிடையே ஆங்கில மொழியில் பேச்சுப் போட்டி, தொழில்நுட்ப வழி கதை சொல்லல், சிந்தனைகளை ஒன்றுசேர்த்தல், பாத்திரமேற்று நடித்தல் மற்றும் இலக்கியக் காட்சிகளை வெளிப்படுத்துதல் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
முன்னதாக கவிதைப் போட்டி மற்றும் கையெழுத்துப் போட்டி 15.05.2026 அன்று நடைபெற்றது.

விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு மாணவ ஆசிரியர்கள் சிறப்பு இசை நிகழ்ச்சியும் ஒளிப்படக் காட்சியும் வழங்கினர். மேலும், முதலாம் ஆண்டு மாணவ ஆசிரியர் அழகு சபரி கணேசன் வரைந்த ஓவியப் படங்கள் நடுவர்களுக்கும் மற்றும் விருந்தினருக்கும் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன.

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஓட்டு மொத்த பரிசை கணிதத்துறை பெற்றது.
நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் செல்வி. ரம்யா ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர் நன்றியுரை கூறினார்.
தேசிய கீதத்துடன் விழா நிறைவுற்றது. இவ்விழாவில் 201 மாணவ ஆசிரியர்கள் பங்கேற்றனர்.













