பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு 95.20 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி:
அரசுப் பள்ளி மாணவர்கள் 92.16 சதவீதம் தேர்ச்சி பெற்று அசத்தல்

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை மொத்தம் 7,91,654 மாணவர்கள் எழுதினார்கள். இதில் மாணவிகள் 4,18,724 பேர்கள், மாணவர்கள் 3,72,930 பேர்கள் தேர்வு எழுதினர். இதில் மொத்த தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 7,53,694 ஆகும் .தேர்ச்சி சதவீதம் 95.20% ஆகும்.

மாணவிகள் 4,06,167 பேர்கள் 97 சதவீதம் என்ற முறையில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 3,47,527 பேர்கள் 93.19 சதவீதம் முறையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 3.81 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.













