தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு முடிந்தது:
நாளை முதல் ( ஏப்ரல் 17 ) கோடை விமுறை ஆரம்பம் :
குஷியில் மாணவர்கள்
தமிழ்நாட்டில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 16 வரை முழு ஆண்டுத் தேர்வு நடைபெற்றது.
6 ம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 1 தொடங்கி ஏப்ரல் 16 இன்று வரை முழு ஆண்டுத் தேர்வு நடைபெற்றது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு சில நாட்கள் முன்னதாக பள்ளிகளை தேர்தல் பணிக்காக ஒப்படைக்க வேண்டியது அவசியம் என்பதனால் இந்த வருடம் முன்கூட்டியே தேர்வுகளை முடிக்க பள்ளித் கல்வித்துறை திட்டமிட்டு முடித்துள்ளது.
இதையடுத்து, நாளை ஏப்ரல் 17ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் மே 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 45 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது .
ஜீன் 1 ம் தேதி திங்கட்கிழமை 2026 – 2027 ம் கல்வி ஆண்டுக்கான பள்ளி ஆரம்பிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும் வரும் கல்வியாண்டு முதல் 1 ம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு புதிய பாட நூல்கள் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது .
இதனால் இந்த வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு ஜூன் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை மாவட்ட அளவில் பணியிடைப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
கோடை விமுறை விடப்பட்ட காரணத்தினால் மாணவர்கள் குஷியில் வீட்டிற்கு சென்றனர்.












