தூத்துக்குடி வடக்கு பத்திரகாளியம்மன் கோயில் தெரு, மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா

தூத்துக்குடி வடக்கு பத்திரகாளியம்மன் கோயில் தெரு, மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா 

தூத்துக்குடி வடக்கு பத்திரகாளி அம்மன் கோயில் தெரு , மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது.

விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி தலைமையேற்றார். விழாவில் சி.எம். மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை வள்ளி முத்தையா மற்றும் தற்போதைய தலைமையாசிரியை சங்கரேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். அனைவரையும் தலைமையாசிரியர் வரவேற்று பேசினார்.

சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களுக்கு ஊக்கப்படுத்தும் விதமான சிறப்புரைகளை ஆற்றினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளி மாணவிகள் பள்ளியின் பெருமைகள், ஆசிரியரின் பெருமைகள் மற்றும் பிரிவுபசாரத்தை பற்றி பேசினார்கள்.

பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை நன்றி உரையுடன் விழா நிறைவுற்றது. விழா ஏற்பாடுகளை தலைமையாசிரியர் ஆலோசனையின் படி அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்