தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி மற்றும் புத்தக வாசிப்பு நற்பணி மன்றம் இணைந்து வழங்கிய புத்தக வாசிப்பு திருவிழா

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி மற்றும் புத்தக வாசிப்பு நற்பணி மன்றம் இணைந்து வழங்கிய புத்தக வாசிப்பு திருவிழா

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி தமிழ்த்துறையும், தூத்துக்குடி புத்தகம் வாசிப்பு நற்பணி மன்றமும் இணைந்து வழங்கும் “புத்தக வாசிப்புத் திருவிழா” 26.03.26. வியாழன் நடைபெற்றது.

புத்தக வாசிப்புத் திருவிழாவில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “சோற்றுக் கணக்கு ” எனும் சிறுகதைப் புத்தகம் மாணவிகளின் வாசிப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் அருட்சகோதரி மரிய சாந்தி வரவேற்புரையாற்றி துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி. ஜெஸி பெர்னான்டோ தலைமை வகித்தார். வ.உ.சிதம்பரம் கல்லூரி வரலாற்று ஆராய்ச்சித் துறை உதவிப் பேராசிரியர் முனைவர்.ஆரோக்கிய செல்வ சுந்தரி மற்றும் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி நுண்கதிர் துறை பேராசிரியர் மருத்துவர். புளோரா நெல்சன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மாணவர்களிடம் புத்தக வாசிப்பின் அவசியம் மற்றும் எப்படி வாசிக்க வேண்டும் என்பது குறித்தும் சிறப்புறையாற்றினார்கள்.

மேலும் இந்நிகழ்வில் ஆங்கிலத்துறை பேராசிரியர் முனைவர். சுதாராணி, கல்லூரி தலைமை நூலகர் முனைவர். வினிதா வாழ்த்துரை வழங்கினார்கள்.


முனைவர். சண்முகவடிவு (எ) சாந்தி, முனைவர் சோனல் மற்றும் முனைவர்.ஜெயசெல்வி, முனைவர் அருள் ஜோஸ்பின், முனைவர் அருட்சகோதரி எழிலரசி, முனைவர் லதா, முனைவர் செல்வ மேரி நிகழ்வினை ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

நவரெத்தினம் நிகழ்வினை தொகுத்து வழங்கி நன்றியுரை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சுமார் நூறு மாணவிகளுக்கு “சோற்றுக் கணக்கு” சிறுகதைப் புத்தகம் வழங்கப்பட்டு வாசிக்கச் செய்து தன் வாசிப்பனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட புத்தக வாசிப்பு நற்பணி மன்றத்தினர் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.