தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் டாக்டர். ஜி.யு.போப் கல்வியியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினவிழா

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் டாக்டர். ஜி.யு.போப் கல்வியியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினவிழா

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம், டாக்டர்.ஜி.யு.போப் கல்வியியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம் (International Women’s Day) 09.03.2026 அன்று இறைவணக்கப் பாடலுடன் கொண்டாடப்பட்டது.

இரண்டாம் ஆண்டு மாணவி லூவினா மற்றும் பெனிட்டா பிரின்சஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். விழாவின் ஆரம்பமாக கல்லூரி பொறுப்பு முதல்வர் முனைவர்.அம்சவேணி வரவேற்புரை ஆற்றினார்.

அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் Ms. ஆக்னஸ் மாணவர்கள் தங்களை யார் என்று அறிந்து கொள்ள சில கற்றல் சோதனைகளை நடத்தி ஆர்வமூட்டினார். மேலும் மகளிர் குறித்து உளவியல் ரீதியாக மிகவும் பயனுள்ள மற்றும் ஊக்கமளிக்கும் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார். அவர் வலியுறுத்திய முக்கிய கருத்துகள்:

பெண்கள் சுயாதீனமாக (Independent Women) இருப்பது எப்படி? மகளிர் அதிகாரமளித்தல் (Women Empowerment)
பெண்கள் உடல் ரீதியாகவும் (Physically), மன ரீதியாகவும் (Mentally), உணர்ச்சி ரீதியாகவும் (Emotionally) நிதி ரீதியாகவும் (Financially)இருக்க வேண்டியதன் அவசியத்தை கூறினார்.

அதன்பிறகு கல்லூரி தாளாளர் முனைவர். ஆலயமணி மாணவிகளுக்கும், ஆசிரியர் பயிற்சியாளர்களுக்கும் (Tracher Trainees) மகளிர் தினம் ஏன் எதற்காகக் கொண்டாடப்படுகிறது என்பதனைக் கூறி, மேலும் பல சிறந்த பயனுள்ள கருத்துகளை வழங்கினார்.

இறுதியாக, முதலாம் ஆண்டு மாணவி அனிஷா ஜெபின் நன்றியுரை ஆற்றி விழாவை முடித்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி ஆசிரியர்கள், மாணாக்கர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.