அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை: விண்ணப்பிக்க வாய்ப்பு நீட்டிப்பு!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை:
விண்ணப்பிக்க வாய்ப்பு நீட்டிப்பு!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 1 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

மாநிலம் முழுவதும் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளில் விருப்பப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

இது வரை 2,24,034 விண்ணப்பங்கள் பெறப் பட்டுள்ளது. நிர்ணயிக்கப் பட்டுள்ள கடைசி தேதிக்குள் விண்ணபிக்கத் தவறும் மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அவர்கள் ஜூன் 1-ம் தேதிக்கு பிறகும் விண்ணப்பிக்கலாம் என்று அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை வழிகாட்டுதல் தொடர்பான விவரங்களை www.tngasa.in என்ற இணைய தளத்தில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.