தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரியில் “வனங்கள்- உயிர்களின் உயிர்” — விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரியில் “வனங்கள்- உயிர்களின் உயிர்” — விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை சுற்றுச்சூழல் மன்றமும், ஈரநிலம், ஆதி நிலம் இணைந்து “வனங்கள் – உயிர்களின் உயிர்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது..

இந் நிகழ்வில் தூய மரியன்னை கல்லூரி செயலர் முனைவர். அருட்சகோதரி குழந்தை தெரஸ் முன்னிலை வகித்தார்.
முதல்வர் முனைவர். அருட்சகோதரி ஜெஸி பெர்னாண்டோ தலைமை உரையாற்றினார். சுயநிதிப்பிரிவு இயக்குநர் முனைவர். அருட்சகோதரி ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் சிறப்புரையாற்றினார்.துணை முதல்வர் முனைவர்.அருட்சகோதரி எழிலரசி வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட ஆதிநிலம் நிறுவனர் வீரப்பன் வனங்களின் வளம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். ஈரநிலம் நிறுவனர் ஓவியர் தமிழரசன் நுண்கலையின் நோக்கம் குறித்துப் பேசினார்.

இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய அனைவரும் இயற்கை குறித்தும், உயிரினங்கள் குறித்தும்,இயற்கையின்றி வாழ்வில்லை என்பதையும் உணர்த்தினர்.மாணவிகளுக்குத் தங்களுடைய எதிர்கால வாழ்வை,இறைவன் தந்த இயற்கையோடு எப்படி சிறப்பாக வாழ வேண்டும் என்ற முறைமைகளைக் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்வில் பேராசிரியர்களும் 600 -க்கும் மேற்பட்ட மாணவிகளும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அதன் பின் தூய மரியன்னை கல்லூரி பாத்திமா அரங்கில் ஓவியர் தமிழரசனின் இயற்கை பாதுகாப்பு, உயிரினங்கள் பாதுகாப்புக் குறித்த கை வண்ண ஓவியங்கள் மாணவர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டன.
அனைத்துத் துறை சார்ந்த மாணவர்களும் இதனைக் கண்டு “வனங்கள் -உயிர்களின் உயிர்” என்பதைத் தெள்ளத் தெளிவாக அறிந்து கொண்டனர்.

இந்நிகழ்வினைத் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் ஒருங்கிணைப்புச் செய்தனர்.