தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி தூய மரியன்னைக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது .
தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி), சார்பில் சாலை பாதுகாப்பு படை (RSP) ஏற்பாடு செய்த “மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு” நிகழ்ச்சி 11.02.2026 அன்று கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினராக தூத்துக்குடி போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் கலந்து கொண்டு சாலை விதிகளை கடைபிடிக்கும் முக்கியத்துவம், தலைக்கவசம் அணிதல், வேகக் கட்டுப்பாடு மற்றும் மாணவர்களின் பொறுப்புணர்வு குறித்து பயனுள்ள உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், சிறப்பாக செயல்பட்ட மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சி முதல்வர், செயலாளர் மற்றும் பேராசிரியர்கள் தலைமையில் நடைபெற்றது.
துணை முதல்வர் அருட்சகோதரி டாக்டர். எழிலரசி,டாக்டர்.அனிலா மற்றும் வணிகவியல் துறை உதவி பேராசிரியர் டாக்டர்.சலேத் மேரி வெற்றிசெல்வி மற்றும் மாணவியர் கலந்து கொண்டனர்.












