தூத்துக்குடி தருவைகுளத்தில் தூய மரியன்னை கல்லூரி சார்பில் சமூக மேம்பாட்டு நிகழ்ச்சி
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி), – சமூக மேம்பாட்டு நிகழ்ச்சி (TOUCH), உன்னத் பாரத் அபியான், மற்றும் ஆங்கில முதுநிலை மற்றும் ஆராய்ச்சி துறை, SPARK அமைப்புடன் இணைந்து, “வாழ்க்கைக்கான நல்ல பழக்கங்களை உருவாக்குதல்” என்ற ஒரியன்டேஷன் நிகழ்ச்சியை தருவைகுளம் – செயின்ட் மைக்கேல் தொடக்கப்பள்ளியில் நடத்தின.
நிகழ்ச்சியை கல்லூரி மாணவிகள் இன்பண்ட் கிறிஸ்டி சாண்ட்ரா, விவிதா ரத்னா நடத்தினர். முனைவர்.செரீனா மார்கரெட் வழிகாட்டுதலின் கீழ், முனைவர் ஹெர்மினா மற்றும் திருமதி மெல்பா ஷாரன் ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சி மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது.












