பணி மேம்பாட்டு ஊதியம் வழங்கக் கோரி உதவி மற்றும் இணை பேராசிரியர்களின் 12 நாட்கள் நடத்திய உள் இருப்பு போராட்டம் நாளை சாலை மறியலாக மாறுகிறது : அரசு செவி சாய்க்குமா ?

பணி மேம்பாட்டு ஊதியம் வழங்கக் கோரி உதவி மற்றும் இணை பேராசிரியர்களின் 12 நாட்கள் நடத்திய உள் இருப்பு போராட்டம் நாளை சாலை மறியலாக மாறுகிறது :
அரசு செவி சாய்க்குமா ?

தமிழகத்தில் கல்லூரிகளில் அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், உறுப்பு கல்லூரிகள் மற்றும் சுய நிதி பிரிவு கல்லூரிகள் என பல கல்லூரிகள் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது.

இந்நிலையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 92 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் 11அரசு கல்லூரிகளும் 6 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 27 சுயநிதிக் கல்லூரிகள் இயங்கி வருகின்றது.

இந்நிலையில் தமிழக அரசு அரசு கல்லூரிகளில் வேலை பார்க்கும் இணை பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு ஊதியம் கடந்த 2021 ஜனவரி 11ஆம் தேதி வெளியிட்டுள்ள அரசாணை ( 05 )யின் கீழ் வழங்கி வருகிறது. ஆனால் மற்ற பேராசிரியர்களுக்கு இதுவரை பணி மேம்பாட்டு ஊதியம் வழங்க வில்லை.

ஒரு கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியில் சேரும் ஒருவர் 4 வரும் வருடம் பணிபுரிந்த நிலையில் ஒரு ஊதியம் உயர்வும்,அடுத்த 5 வருடத்தில் ஒரு ஊதிய உயர்வும் மேலும் அடுத்த 4 வருடத்தில் மேலும் ஒரு ஊதிய உயர்வும் அதாவது 13 வருடங்களில் மூன்று வகை ஊதிய உயர்வும் வழங்கி அவர்களுக்கு பணி உயர்வு அதாவது உதவி பேராசிரியரில் இருந்து இணை பேராசிரியராக பதவி உயர்வு பெறுகிறார்கள்.

இந்நிலையில் இதுவரை பணி உயர்வு பெற்ற இணைப் பேராசிரியர்களுக்கும் உதவி பேராசிரியராக இருந்து சம்பள உயர்வு ஆணையை பெற்ற உதவிப் பேரசிரியர்களுக்கும் இதுவரை பணி மேம்பாட்டு ஊதியத்தை அரசு வழங்கவில்லை.

ஆனால் அரசு கல்லூரியில் வேலை பார்க்கும் உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்களுக்கு மட்டும் அரசு ஊதிய உயர்வு வழங்கி உள்ளது. இதற்கான ஆணை 2021 ஜனவரி 11ஆம் தேதி அரசு ஆணை எண் 05 ல் விவரமாக வெளியிட்ட சூழ்நிலையிலும் இதுவரை அரசு உதவி பெறும் கல்லூரி உதவி மற்றும் இணை பேராசிரியர்களுக்கு வழங்கவில்லை.

எனவே மூட்டா சங்கத்தில் உள்ள உதவி மற்றும் இணை பேராசிரியர்கள் தத்தம் கல்லூரிகளில் கடந்த 12 நாட்களாக உள் இருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதில் அவர்கள் மாணவர்களின் படிப்பிற்கு எவ்வித பேதமும் இன்றி தங்களது வகுப்பு நேரத்தில் வேலை செய்துவிட்டு மீதி நேரங்களில் தான் இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர் .

கடந்த 12 நாட்களாக இந்த உதவி மற்றும் இணை பேராசிரியர்களின் கோரிக்கையை ஏற்காத தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலையில் மூட்டா சங்கத்தினர் நாளை ( 07 – 02 – 2026 ) சனிக்கிழமை தங்களது மண்டல அலுவலகத்தில் சாலை மறியல் போராட்டங்களை நடத்த இருக்கின்றனர்.

நாளை மதுரை,நெல்லை மற்றும் சென்னை ( AUT ) யில் சாலை மறியல் செய்ய இருக்கின்றனர்.

அதன்படி நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மூட்டா சங்கத்தில் உள்ள உதவி மற்றும் இணை பேராசிரியர்கள் பாளையங்கோட்டை சித்தா மருத்துவ கல்லூரி முன்பு நாளை காலை 9.00 மணிக்கு தங்களது சாலை மறியல் போராட்டத்தை நடத்த இருக்கின்றனர் .

இதில் நெல்லை ,கன்னியாகுமரி ,தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள அரசு உதவி பெரும் கல்லூரி உதவி மற்றும் இணை பேராசிரியர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அரசு தங்களது கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் .

தமிழக அரசு கடந்த 2021 ஆம் வருடம் ஜனவரி 11ஆம் தேதி அரசாணை 05 ன் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணிபுரியும் உதவி மற்றும் இணை பேராசிரியர்களுக்கு பணி நியமன ஊதிய உயர்வை வழங்க ஆணையை வெளியிட்டுள்ளனர். ஆனால் அரசு கல்லூரியில் பணிபுரியும் உதவி மற்றும் இணை பேராசிரியர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு வழங்கி உள்ளது .மேலும் கோவை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணிபுரியும் உதவி மற்றும் இணை பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வை வழங்கி உள்ளனர். ஆனால் மற்ற எந்த மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு இதுவரை ஊதிய உயர்வு வழங்கவில்லை.ஏன் இந்த பாரபட்சம்?

எனவே பணியில் கவனமாக இருந்து மற்ற நேரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உதவி மற்றும் இணை பேராசிரியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி மாணவர்களின் உயர் கல்வி பாதிக்காத வண்ணம் இந்த அரசு உதவ வேண்டும் என்று கல்விச் செய்திகள் கோரிக்கை வைத்துள்ளது.

தூத்துக்குடி நிலவரம்:

இந்நிலையில் தூத்துக்குடியில் அரசு உதவி பெறும் கல்லூரிகளான வ. உ.சிதம்பரம் கல்லூரியில் மூட்டா கிளைச் செயலாளர் முனைவர். மீனாட்சி சுந்தரம், மத்திய இணை பொதுச்செயலாளர் முனைவர். சிவஞானம் தலைமையில் கடந்த 12 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் கல்லூரி மூட்டா செயலாளர் முனைவர். அய்யாத்துரை தலைமையில் நடைபெற்றது.

அதேபோல் தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரியில் ஆங்கிலத்துறை இணை பேராசிரியர் முனைவர். செரினா மார்கரெட் தலைமையில் கடந்த 12 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வந்தது.

higher education _e_5_2021