உலக ஈரநில பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பள்ளிக்கு மரக்கன்றுகள் வழங்கினர்
தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் அருள் சகோதரி பெர்னதெத் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் அருள் சகோதரி கிறிஸ்டி முன்னிலையில் திண்டுக்கல் மாநில தலைமை அன்னை அருள் சகோதரி பவுலின்பாத்திமா தலைமையில் உலக ஈரநில பாதுகாப்பை முன்னிட்டு மாணவியர் மரக்கன்றுகளையும் , விதை பந்துகளையும் , மற்றும் பிறந்தநாள் பரிசாக பத்தாம் வகுப்பு மாணவிகள் பள்ளி நூலகத்திற்கு புத்தகங்களை கொடுத்து பாடல்மற்றும் சொற்பொழிவு மூலமாக இவ்விழாவினை சிறப்பித்தார்கள்.

உதவி தலைமை ஆசிரியை அருள் சகோதரி கிறிஸ்டி இவ்விழாவில் பங்கேற்ற அனைத்து மாணவிகளையும், பசுமைப் படை ஆசிரியை சகாய ஆனந்தி விண்ணரசியையும் பாராட்டினார்.ச












