சாயர்புரம் டாக்டர் ஜி.யூ.போப் கல்வியியல் கல்லூரியில் “குப்பைத் திருவிழா” கொண்டாட்டம்
தமிழ்நாடு அரசு, குப்பையில்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் ஜனவரி 21 முதல் 23, 2026 வரை “குப்பைத் திருவிழா” நடத்தியது. இதனை முன்னிட்டு சாயர்புரம் டாக்டர் ஜி.யூ.போப் கல்வியியல் கல்லூரியில் “குப்பைத் திருவிழா” நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் டாக்டர்.அம்சவேணி தலைமையில் விழா ஆரம்பிக்கப்பட்டது. அதில் முதலாம், இரண்டாம் ஆண்டு மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

மாணாக்கர்கள் குப்பையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்று கோஷமிட்டு சாயர்புரம் போப் காலணியில் பேரணி நடத்தினர். குப்பை கிடங்குகளே இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து குப்பைகளை சேகரித்தனர். குப்பைகளை மீண்டும் பயன்படுத்தும் வளமாக மாற்றும் வழிமுறைகளை மக்களுக்கு அறிவுறுத்தினர். மேலும் போப் காலணியை குப்பை இல்லா காலணியாக எம் கல்லூரி மாணாக்கர் மாற்ற வழிவகுத்தனர். இந்த “குப்பைத் திருவிழா” நிகழ்ச்சியால் மாணாக்கர் பயனடைந்தனர்.













