கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு
தேசிய வாக்காளர் தினமான 25.1.2026 ஆனது விடுமுறை தினத்தில் வருவதால் அதற்கு பதிலாக 23.1.2026 அன்று காலை 11 மணிக்கு தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்திட அறிவுறுத்தப்பட்டது அதன் அடிப்படையில் கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 23/01/2026 அன்று தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.
வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது, இதன் மூலம் நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் முடிவெடுக்கும் செயல்முறைக்கு பங்களிக்க முடியும்.

பள்ளி முதல்வர் டாக்டர்.பிரபு மாணவர்களிடம் உரையாற்றி உரிமையுள்ள, பொறுப்புள்ள குடிமக்களாக வாக்களிக்க ஊக்குவித்தார்.
இதைத் தொடர்ந்து, மாணவர்கள் சுகவர்ணா, தீபா ஸ்ரீ மற்றும் லாவண்யா ஆகியோர் தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை வாசித்தனர். நாட்டின் சிறந்த வளர்ச்சிக்காக வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.













