கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 43 வது விளையாட்டு விழா

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 43 வது விளையாட்டு விழா

கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத்திற்குப் பாத்தியப்பட்ட கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 43-வது விளையாட்டு விழா 02-01-2026 (வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணிக்கு ஆரம்பமானது.

விழாவிற்கு கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத் தலைவர் ரமேஷ் வழிகாட்டுதலின் படி, சங்க உபதலைவர் செல்வராஜ், செயலாளர் ஜெயபாலன், பொருளாளர் சுரேஷ்குமார் மற்றும் உறுப்பினர் ராஜேந்திர பிரசாத், மாரியப்பன், தர்மகர்த்தா ஆகியோர் தலைமை வகித்து பள்ளிக் கொடியை ஏற்றி விளையாட்டு விழாவைச் தொடங்கி வைத்தனர்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஜெகன்நாதன் (DSP) மற்றும்Dr.கண்ணதாசன் (DIP) ஆகியோர் கலந்து கொண்டு தேசியக் கொடி மற்றும் ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்து விளையாட்டு விழாவைத் தொடங்கி வைத்தனர்.

அவர்கள் மாணவர்களுக்கு விளையாட்டின் முக்கியத்துவம் மற்றும் உடல் ஆரோக்கியத்தின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றி மாணவர்களை உற்சாகப்படுத்தினர். சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் புறாக்களை பறக்கவிட்டு விழாவைச் சிறப்பித்தனர்.

பள்ளிச் செயலாளர் செல்வம் (அட்வகேட்) பள்ளிப் பொருளாளர் பாஸ்கரன் மற்றும் பள்ளிக்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், கண்ணன்,செல்வம், பொன்ராமலிங்கம், ரவிமாணிக்கம் , ஆகியோர் கலந்து கொண்டு விழாவிற்கு பெருமை சேர்த்தனர்.

பள்ளி மாணவி கீர்த்தனா அனைவரையும் வரவேற்றார். விழா நிகழ்ச்சிகளை பள்ளி முதல்வர் பிரபு, விழா ஒருங்கிணைப்பாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் இருபால் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

விழாவில் மாணவர்களின் பல்வேறு வகையான உடற்பயிற்சிகள் இடம் பெற்றன. மேலும் மாணவர்களின் நடனம், பேச்சு, சிலம்பம், கராத்தே, யோகா போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றன.