கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் கருத்தரங்கம்

கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் கருத்தரங்கம்

கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப் பணி திட்டம் சார்பாக சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் 24.12.2025 அன்று நடைபெற்றது.

இந்த கருத்தரங்கத்திற்கு பொறுப்பு முதல்வர் முனைவர். ராம்சங்கர் தலைமை வகித்து கருத்தரங்கை தொடங்கி வைத்து தலைமை உரையாற்றினார்.


இதில் சிறப்பு விருந்தினராக கடையநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் முரளிதரன் பங்கு கொண்டு சிறப்புரையாற்றினார்.

தென்காசி மாவட்ட சமூகநீதி மனித உரிமைகள் பிரிவு புள்ளியியல் ஆய்வாளர் தங்க குமார் மாணவ, மாணவிகளுக்கு சமூகநீதி காப்பதில் மாணவர்கள் முன் களப்பணி ஆற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் முனைவர். பால் மகேஷ் வரவேற்று பேசினார்.

இந்நிகழ்வில் இறுதியாக வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர். ராஜேஷ் கண்ணா நன்றியுரை கூறினார்.

நாட்டு நலப்பணித் திட்ட மாணவி கலா தொகுத்து வழங்கினார்.
இக்கருத்தரங்கில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நல பணி திட்ட அலுவலர் முனைவர். பால் மகேஷ் சிறப்பாக செய்திருந்தார்.