தூத்துக்குடி செயின்ட் தாமஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் டிவைன் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் போட்டி : மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்
அப்துல்கலாம் தற்காப்பு கலை பயிற்சி பள்ளியின் சார்பாக செயின்ட் தாமஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற டிவைன் வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் (Divine World Book of Records) போட்டியினை மேயர் ஜெகன் பெரியசாமி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.பின்னர் மாணவர்கள் நடத்திய தற்காப்பு பயிற்சியான சிலம்பு பயிற்சியினை பார்வையிட்டு அவர்களை கை குலுக்கி பாராட்டு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் பங்கு தந்தை அமலன் தமியான், பள்ளி முதல்வர்.ஆஸ்கர், தற்காப்பு பள்ளியின் நிறுவனர் அருண்குமார், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.













