TET விவகாரத்தில் மத்திய அரசு தலையிட விரும்பவில்லை :
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் மத்திய அரசு தலையிட விரும்பவில்லை என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட TET சட்ட திருத்தத்திற்கான, சட்ட மசோதா அவையில் கொண்டு வரப்படாமலேயே பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நிறைவடைந்தது.
ஆகவே சிறப்பு தகுதி தேர்வு மற்றும் மதிப்பெண் குறைப்பது பற்றி அரசு விரைந்து முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது.
வரும் திங்கள்கிழமை ஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பாக ஆசிரியர்கள் சங்கத்துடன் தமிழ்நாடு அரசு ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளது.












