சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்து :
காலையில் அறிவிப்பு, மாலையில் ரத்து :
காரணம் என்ன?
உச்ச நீதிமன்றம் ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற உத்தரவினை பிறப்பித்துள்ள நிலையில் ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்த திட்டமிட்ட தமிழக அரசு, அதுதொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று ( 19 – 11 – 2025 ) வெளியிட்டது.
அதன்படி சிறப்பு தகுதித்தேர்வு தாள்-1 தேர்வு அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் 24-ந் தேதியும், தாள்-2 தேர்வு 25-ந் தேதியும் நடைபெறும் என்றும், இதற்கு இன்று (வியாழக்கிழமை) முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 20-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த அறிவிப்பு நவம்பர் 19ம் தேதியான நேற்று பிற்பகலில் வாபஸ் பெறப்பட்டது. முறையான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏன் காலையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. பிற்பகலில் வாபஸ் பெறப்பட்டது என்பது குறித்த தெளிவான காரணங்கள் இல்லை என்றாலும் இதற்கான காரணம் என்ன என்று அறிவித்துள்ளது.
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பில் இருந்த சிறிய பிழைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பாக புதிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரத்துக்கான காரணம்:
அறிவிப்பில் சிறிய பிழைகள் இருந்ததால், ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை நீக்கியுள்ளது.
விண்ணப்பத் தொடக்கம்:
நாளை (நவம்பர் 20) முதல் விண்ணப்பிக்கலாம் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போதைய நிலை:
அறிவிப்பு நீக்கப்பட்டதால், விண்ணப்ப செயல்முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அடுத்தகட்ட நடவடிக்கை:
பிழைகள் திருத்தப்பட்டு புதிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
1.76 லட்சம் ஆசிரியர்கள் :
தமிழ்நாட்டை பொறுத்தவரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் 1 லட்சத்து 76 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வை எழுத வேண்டிய நிலையில் இருக்கின்றனர். இதுதவிர இதேபோல் தனியார் பள்ளிகளில் பணியாற்றுவோரில் சுமார் 2 லட்சம் பேர் தகுதி தேர்வில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வெற்றி பெறாவிட்டால் வேலையை இழக்க நேரிடும் என்கிற நிலையில் இருக்கிறார்கள்.












