தூத்துக்குடி ஏ. பி. சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம் :
உதவி என். எல். சி. பவர் லிட்




என். எல். சி.தமிழ்நாடு பவர் லிமிடெட் தூத்துக்குடி பொறுப்புணர்வு திட்டத்தின் உதவியுடன் தூத்துக்குடி ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியும் அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் 16/11/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் உள்ள ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கலை அரங்கத்தில் காலை 9 மணி அளவில் என்.எல்.சி லிமிடெட் CEO அனந்தராமானுஜம் தலைமையிலும் ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர்.சுப்புலட்சுமி முன்னிலையிலும் மேலும் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் பெத்து பாலமுருகன் ஆதரவுடன் துவங்கியது.
ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட (அணி எண்கள் 47 & 57) ஒருங்கிணைப்பாளர்களான வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஸ்டெல்லா பாக்கியம் மற்றும் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர்.
புஷ்பகவல்லி ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்டு வழிநடத்தப்பட்டது. கணிதத்துறை உதவி பேராசிரியர்களான முனைவர். மகேஸ்வரி, முனைவர். பால தீபரசி, தாவரவியல் துறை உதவிப் பேராசியர் சொர்ணலட்சுமி ஆகிய மூவரும் இம்முகாமை வழிநடத்தினர்
.இந் நிகழ்ச்சி நடப்பதற்கு உறுதுணையாக ஏ.பி.சி கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் சுமார் 35 பேர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சேவை செய்தனர்.
இந்த இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாமில் 240 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.கண் பரிசோதனை செய்து கொண்ட பொதுமக்களுக்கு மருந்துகள் மற்றும் கண் கண்ணாடிகளும் வழங்கப்பட்டன. கண் அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு அரவிந்த் மருத்துவ மனையில் வைத்து இலவசமாக சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












