ஆசிரியர் தகுதித் தேர்வு – தமிழகம் முழுவதும் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதினர்

ஆசிரியர் தகுதித் தேர்வு – தமிழகம் முழுவதும் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதினர்

பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற அடிப்படையில், அதற்கான தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

அதன்படி, நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்டு மாதம் வெளியிடப்பட்டது. செப்டம்பர் மாதம் 10-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதற்கான ஹால் டிக்கெட்டை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டிந்தது. இந்த நிலையில், இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள்-1 நேற்று 367 மையங்களில் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் நேற்று ஆசிரியர் தகுதித் தேர்வை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதினர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தேர்வு நடைபெற்றதால், அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இருந்தாலும் தேர்வு கடினமாக இருந்ததாக பெரும்பான்மையான தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து இன்று நடைபெறும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தாள்-2 தகுதித்தேர்வை 1,241 மையங்களில் 3 லட்சத்து 73 ஆயிரத்து 438 பேர் எழுத உள்ளனர்.