கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில்
குழந்தைகள் தின விழா

முன்னாள் பிரதமர் பண்டித ஜவர்ஹலால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14 ம் தேதியை நாம் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம்.

அதனை முன்னிட்டு கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கோவில்பட்டி நாடார் உறவின்முறைச்சங்கத்தலைவர் ரமேஷ் தலைமையில் குழந்தைகள் தின விழா 14.11.2025 வெள்ளிக்கிழமை இன்று கொண்டாடப்பட்டது.

நாடார் உறவின் முறைச் சங்க உப தலைவர் செல்வராஜ், சங்கச் செயலாளார் ஜெயபாலன் சங்கப் பொருளாளர் சுரேஷ் குமார், பத்திரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளிச் செயலாளர் அட்வகேட் செல்வம் மற்றும் பள்ளி பொருளாளர் பாஸ்கரன் ஆலோசனையின்படி குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

பள்ளிக்குழு உறுப்பினர்கள்,செல்வம், செந்தில்குமார், ரவிமாணிக்கம், பள்ளி முதல்வர் பிரபு ஆகியோர் விழாவினை தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி வைத்தனர்.

பள்ளி மாணவகள் அனைவரையும் வரவேற்றனர்.

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு மாறுவேடப்போட்டி, பேச்சுப்போட்டி, நடனம் மற்றும் நாடகம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இப் போட்டிகளில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

மாணவி சுகவர்ணா நன்றி கூறினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை சிவராணி, செல்வவிமலா, மற்றும் இருபால் ஆசிரியப்பெருமக்களும் அலுவலர்களும் செய்திருந்தனர்.