கோவில்பட்டி உண்ணாமலைக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது

கோவில்பட்டி உண்ணாமலைக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது

கோவில்பட்டி உண்ணாமலைக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இறுதி ஆண்டு வணிகவியல் மற்றும் கணினி அறிவியல் துறை மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

மாணவர்களின் தொழில்திறனையும், திறனறிவையும் வெளிக்கொணரும் நோக்கத்துடன் நடைபெற்ற இந்நிகழ்வில், 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இம்முகாமில், பெசன்ட் டெக்னாலஜி (Besant Technology) நிறுவனத்திலிருந்து வந்த மனிதவள மேலாளர்கள் (HRs) மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வுகளை நடத்தினர்.

வேலைவாய்ப்பு தேர்வுகள் மூன்று முதன்மைத் தேர்வு (Preliminary Exam), குழு விவாதம் (Group Discussion), மற்றும் தனிப்பட்ட நேர்முகம் (Personal Interview) — ஆகிய மூன்று கட்டங்களாக நடைபெற்றன.

அனைத்து கட்டங்களிலும் சிறப்பாகப் பங்கேற்று தங்களது திறமையைக் காட்டிய மாணவர்களுக்கு நிறுவன வேலைவாய்ப்பு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சி, கல்லூரித் தாளாளர் விஜயன் ஆலோசனையிலும், வழிகாட்டுதலிலும் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர். அண்ணாமலைசாமி மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக சிறப்புரை ஆற்றினார். அவரின் உரையில், “மாணவர்கள் தங்கள் திறமையில் நம்பிக்கை வைத்து, சவால்களை தைரியமாக எதிர்கொண்டு, தங்கள் கனவுகளை நனவாக்க வேண்டும்” என பேசினார்.

நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் வேலைவாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முத்துராஜா, கணினி அறிவியல் துறையின் பேராசிரியர்கள் சரண்யா மற்றும் பிரபாதேவி ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.