தூத்துக்குடி சக்தி விநாயகர் இந்து வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நமது வணக்கத்துக்குரிய மேயரும் எமது மாணவர்களும் கலந்துரையாடல் நிகழ்ச்சி :
மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சிதம்பர நகர் பகுதியிலுள்ள சக்தி விநாயகர் இந்து வித்யாலயா சிபிஎஸ்சி மேல்நிலைப் பள்ளியில் நமது வணக்கத்திற்குரிய மேயரும் எமது மாணவர்களும் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தலைமைவகித்து பங்கேற்ற மேயர் ஜெகன் பெரியசாமி மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர்கள் ஆனந்த், ரமேஷ்,ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.













