தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி, எம்பவர் இந்தியா மற்றும் சைபர் கிரைம் சொசைட்டி இணைந்து நடத்திய பெண்களுக்கு எதிரான இணைய குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி,எம்பவர் இந்தியா மற்றும் சைபர் கிரைம் சொசைட்டி ஆப் இந்தியா இணைந்து பெண்களுக்கு எதிரான இணைய குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கத்தை நடத்தியது.
கருத்தரங்கை மாவட்ட இணைய குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ் துவக்கி வைத்தார்.
எம்பவர் இந்தியா கௌரவ செயலாளரும், தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினருமான சங்கர் தலைமை வகித்து பேசியபோது பாதுகாப்பான டிஜிட்டல் பயணத்திற்கு ஒவ்வொருவரின் பொறுப்பும், பங்களிப்பும் அவசியம். அறிமுகமில்லாதவர்கள் ஏடிஎம் அருகில் நின்று எங்களிடம் ஏடிஎம் கார்டு இல்லை எனவும், மிகவும் அவசரமாக எனக்கு பணம் தேவைப்படுகின்றது என்றும், வெளியூரிலுள்ள என்னுடைய உறவினர் உங்களுடைய வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்புவர் அதை நீங்கள் உங்களது ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணத்தை எடுத்துத் தாருங்கள் எனக் கூறினால் அவர்களை நம்பாதீர்கள். உங்களை அறியாமல் மோசடி வலையில் சிக்கி விடுவீர்கள். ஆகவே அறிமுகமில்லாதவர்களுக்கு பணம் எடுத்து கொடுக்காதீர்கள் எனக் கூறினார்.
தூய மரியன்னை கல்லூரி முதல்வர் ஜெசி வாழ்த்துரை வழங்கினார். பெண்கள் மீது நடைபெறும் இணைய குற்றங்கள், வழக்குகள் மற்றும் அதன் நடைமுறைகளை சைபர் கிரைம் சொசைட்டி ஆப் இந்தியா தலைவர் பாலு சுவாமிநாதன் எடுத்துரைத்தார்.
இணைய குற்றங்களின் தொழில் நுட்ப அம்சங்களை சைபர் கிரைம் சொசைட்டி ஆப் இந்தியா செயலாளர் விஜயகுமார் விளக்கிக் கூறினார்.
முன்னதாக தூய மரியன்னை கல்லூரி பொருளாதாரத்துறை பேராசிரியை ரதி வரவேற்றார். மாணவி முத்து மதுமிதா நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூய மரியன்னை கல்லூரியின் நுகர்வோர் மற்றும் மனித உரிமை மன்றங்களின் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.










