கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான கலைப் போட்டி “COGNITO’25” நடைபெற்றது

கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான கலைப் போட்டி “COGNITO’25” நடைபெற்றது

கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் மாநில அளவிலான கலைப் போட்டி “COGNITO’25” எனும் தலைப்பில் நடைபெற்றது.

இப்போட்டியில் வினாடி வினா, மெகந்தி, ரங்கோலி, ஆய்வுக் கட்டுரை, டிபக்ஷிங் (Debugging), நடனம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, தென்காசி போன்ற பல்வேறு மாவட்டங்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

நிகழ்வில் கல்லூரி தாளாளர் விஜயன் தலைமை வகித்து மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தலைமையுரை ஆற்றினார்.

கல்லூரி முதல்வர் முனைவர் அண்ணாமலைசாமி சிறப்புரை ஆற்றி, போட்டிகள் மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் சிறந்த தளமாக அமைந்துள்ளதாக பாராட்டினார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கல்லூரியின் துணை முதல்வர் முனைவர்.ராமர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

போட்டியின் இறுதியில் தூத்துக்குடி மாவட்ட காமராஜ் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.

சாத்தூர் SRNM கல்லூரி இரண்டாம் இடத்தை பிடித்தது.

நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழாவின் ஒருங்கிணைப்பாளர் சரண்யா, இணை ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர். அருண்குமார், முத்துராஜா, கல்வி ஒருங்கிணைப்பாளர் அருணா தீப சுந்தரி, நிகழ்வின் செயலர் முனைவர். லாவண்யா, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணாக்கர்கள் செய்திருந்தனர்.