தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான பறவைகள் பார்வையிடும் நிகழ்ச்சி

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான பறவைகள் பார்வையிடும் நிகழ்ச்சி

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியின்  75-ஆவது ஆண்டு பவள விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, விலங்கியல் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான பறவைகள் பார்வையிடும் நிகழ்ச்சி 23.01.2026 அன்று வ.உ.சி. கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் விலங்கியல் துறைத் தலைவர் டாக்டர். ராதிகா மாணவர்களை வரவேற்றார். நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் டாக்டர்.வீரபாகு தொடங்கி வைத்தார்.

ஏ.பி.சி. வீரபாகு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மற்றும் சக்தி விநாயகர் இந்து வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி ஆகிய பள்ளிகளிலிருந்து 36 மாணவர்கள் மற்றும் 5 ஆசிரியர்கள் இந்த நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் போது, மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் 30-க்கும் மேற்பட்ட பறவையினங்களை பார்வையிடும் வாய்ப்பைப் பெற்றனர். இந்த அமர்வு பறவையினங்களை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், உயிரியல் பல்வகைமையை பாதுகாப்பது குறித்த ஆர்வத்தையும் பள்ளி மாணவர்களிடையே உருவாக்கியது.