கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரத்த தான முகாம்

கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரத்த தான முகாம்
கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரத்த தான முகாம் இன்று (26/09/2025) நடைபெற்றது. இந்நிகழ்வை கல்லூரி தாளாளர் விஜயன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர். அண்ணாமலைசாமி முன்னிலை வகித்து இரத்ததானத்தின் சிறப்பைப் பற்றி பேசினார்.
இம்முகாமில் இரத்ததான வங்கி மருத்துவ அதிகாரி கோவில்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவர் துளசிலட்சுமி மற்றும் செவிலியர்கள் இணைந்து பங்கேற்று, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தன்னார்வத்துடன் இரத்ததானம் செய்தனர்.

இதில் மொத்தம் 53 பேர் இரத்த தானம் செய்து சமூகப்பணிக்கு முன்னுதாரணமாக அமைந்தனர்.

இரத்த தானம் மூலம் பல உயிர்களை காப்பாற்ற முடியும் என்பதை வலியுறுத்தி மருத்துவர்கள் விழிப்புணர்வு உரை வழங்கினர்.

இரத்ததானம் செய்த அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


நிகழ்ச்சியை சிறப்பாகச் செய்தமைக்காக கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் அனைவருக்கும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கீதாராணி நன்றி தெரிவித்தார்.