தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி இணைந்து தூய்மைப்பணி : மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி இணைந்து தூய்மைப்பணி :
மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியின் 50வது ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சியும் கல்லூரி மாணவியர்களும் இணைந்து முத்து நகர் கடற்கரையில் நடைபெற்ற தூய்மைப்படுத்தும் பணியினை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்து மாணவிகளுடன் முத்து நகர் கடற்கரையை தூய்மை படுத்தும் பணியினை மேற்கொண்டார்.

மேயரின் பணி பாராட்டும் விதமாக அமைந்தது.

உடன் கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள்,மாணவிகள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.