தூத்துக்குடி பண்டாரம் பட்டி தூ. நா. தி. அ. க. தொடக்கப்பள்ளியில் மேஜை மற்றும் இருக்கைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி டைட்டன்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் மாணவர்கள் அமர்வதற்கு மேஜை மற்றும் இருக்கைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
பள்ளி மாணவர்கள் தமிழ் தாய் வாழ்த்து பாட நிகழ்ச்சியானது ஆரம்பமானது. நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத்தின் துணை ஆளுநர் புளோரா ஜுவானிட்டா தலைமை தாங்கினார். ரோட்டரி சங்கத் தலைவர் சொர்ண மணி குமார் மற்றும் செயலாளர் ரமேஷ் குமார் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் நெல்சன் பொன்ராஜ் அனைவரையும் வரவேற்று பள்ளியின் சிறப்பை எடுத்துக் கூறினார். ரோட்டரி சங்க துணை ஆளுநர் புளோரா ஜுவானிட்டா தலைமை உரை ஆற்றினார். ரோட்டரி சங்க தலைவர் சொர்ணமணி குமார் மற்றும் செயலாளர் ரமேஷ் குமார் சிறப்பு உரையாற்றினர்.
அதனைத் தொடர்ந்து பள்ளிக்கு 9 ஜோடி மேஜைகள் மற்றும் இருக்கைகள் வழங்கப்பட்டது. தலைமையாசிரியர் அனைவருக்கும் நன்றி கூறினார்












