தூத்துக்குடி ரங்கநாதபுரம் சிஎம் தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளியில் 79 வது சுதந்திர தின விழா
இந்திய திருநாட்டின் 79 ஆவது சுதந்திர தின விழா தூத்துக்குடி ரங்கநாதபுரம் சி எம் தொடக்கப்பள்ளி மற்றும் சிஎம் மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.
விழாவில் லயன்ஸ் இன்டர்நேஷனல், தூத்துக்குடி பாரதி லயன்ஸ் சங்கம் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தூத்துக்குடி பாரதி லயன்ஸ் சங்கத் தலைவர் கண்ணன் சுதந்திர தின கொடியேற்றி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
பள்ளிச் செயலர் வள்ளியம்மாள் திருச்சிற்றம்பலம் விழா தலைமை ஏற்கவும், பாரதி லயன்ஸ் சங்க லயன் ரவேல் முன்னிலை வகிக்க, பாரதி லயன் ராம்ஸ் டி அன்பரசன் மற்றும் லயன் கல்யாணசுந்தரம் , லயன் வசீகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரேஸ்வரி வரவேற்புரை வழங்க, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை வள்ளியம்மாள் நன்றியுரை கூற நாட்டுப் பண்ணுடன் விழா நிறைவுற்றது.












