கோவில்பட்டி SDA பதின்ம மேல்நிலைப் பள்ளியில் பசுமை நாள்
கோவில்பட்டி SDA பதின்ம மேல்நிலைப் பள்ளியில் பசுமை நாள் கொண்டாடப்பட்டது.
மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பச்சை வண்ண ஆடைகள் உடுத்தி வந்தனர்.அனைத்து மாணவர்களும் ,பச்சைக் காய்கறிகள்,கீரை, புதினா,கருவேப்பிலை ஆகியவற்றால் செய்யப்பட்ட உணவு வகைகளை கொண்டு வந்து,மதியம் உணவருந்தினார்கள்.மரக்கன்றுகள் நடப்பட்டன.
பள்ளியின் முதல்வர்,பள்ளியின் பொருளாளர்,ஆசிரியர்கள் அழகர், ராஜசேகர்,தமிழ்ச் செம்மல் தமிழாசிரியர் இராசு ஆகியோர் கலந்த கொண்டனர்.












