தூத்துக்குடி ஏ. பி. சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி, முடிவைத்தானேந்தல் இணைந்து நடத்திய “இயற்கையை பாதுகாப்போம், உயிர்ச் சூழலை பேணுவோம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி ஏ. பி. சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி, முடிவைத்தானேந்தல் இணைந்து நடத்திய “இயற்கையை பாதுகாப்போம், உயிர்ச் சூழலை பேணுவோம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் அணி எண் 47 மற்றும் 57 மற்றும் முடிவைத்தானேந்தல் அரசு மேல் நிலைப் பள்ளியும் இனணந்து ஜூலை 28, 2025 அன்று இயற்கை பாதுகாப்பு நாளை வலியுறுத்தும் விதமாக ‘இயற்கையை பாதுகாப்போம் உயிர்ச் சூழலைப் பேணுவோம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியர் எலியாஸ் , பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர்
முனைவர். சரவணகுமார், ஆசிரியர், சதீஷ் குமார், முதுகலை தமிழாசிரியர் மகஜா, முதுகலை தமிழாசிரியர், சீனிவாசன், முதுகலை ஆசிரியர் ஜெரால்டு, ஆகியோர் கலந்து கொண்டனர்.

நெகிழிப் பைகள் பயன்பாட்டால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்புகள் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு மாணவர்களிடையே ஏற்படுத்தும் விதமாக காகிதப் பைகள், தோட்டப் பயிர்களின் விதைகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவர்களுக்கு இயற்கையை வலியுறுத்தி விளையாட்டுகள் நடத்தப்பட்டது. இயற்கைச் சூழலைப் பாதுகாக்கும் விதமாக தெருக்கூத்து நாட்டு நலப் பணித் திட்ட மாணவியர்களால் நிகழ்த்தப்பட்டது. சுமார் 15 க்கும் மேற்பட்ட
மரக்கன்றுகள் முடிவைத்தானேந்தல் பள்ளி வளாகத்தில் தலைமையாசிரியர், பசுமைப் படை அதிகாரி சரவணக்குமார் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அணி எண் 47 மற்றும் 57 ஆகியோரால் நடப்பட்டன. பள்ளி வளாகம் முழுவதும் நாட்டு நலப் பணித் திட்ட மாணவியரால் சிறப்பாக தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டன.

மேலும் குப்பைகளை அப்புறப்படுத்தும் பயிற்சியை நாட்டு நலப் பணித் திட்ட மாணவிகளுக்கு பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சரவணக்குமார் வழங்கினார்.

மகளிர் சுய உதவிக் குழுவினரும் தூய்மைப் பணியினரும் இனணந்து உருவாக்கியுள்ள மண்புழு உரம் தயாரித்தல் குறித்த விழிப்புணர்வு நாட்டு நலப் பணித் திட்ட மாணவிகளுக்கு உணர்த்தப்பட்டது. அவர்களுக்கு காய்கறி விதைகள் மற்றும் காகிதப் பைகள் வழங்கப்பட்டன. பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்களுக்கு விதைகள் மற்றும் துணிப் பைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வின் நிறைவாக அனைத்து ஏற்பாடுகளையும் முனைவர் ஸ்டெல்லா பாக்கியம் (அணி எண் 47) வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் மற்றும் முனைவர் புஷ்பகவல்லி (அணி எண் 57) தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

நிகழ்வில் முடிவைத்தானேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 15 பேரும், 3 பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.