தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி மாணவர்கள் மதுரை லேடி டோக் கல்லூரிக்கு கற்றல் பயணம்

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி மாணவர்கள் மதுரை லேடி டோக் கல்லூரிக்கு கற்றல் பயணம்

வ உ சிதம்பரம் கல்லூரியின் ஆங்கிலத்துறை , முதுநிலை முதலாம் ஆண்டு மாணவர்களை அனுபவ அடிப்படையிலான கற்றல் பயணமாக, மதுரை லேடி டோக் கல்லூரிக்கு அழைத்து சென்றது.

அங்கு மேடையில் நடைபெற்ற ஓதெல்லோ நாடகத்தை மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தனர்.

அத்துடன், மாணவர்கள் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கும் சென்றனர். நூலகத்தின் ஆறு மாடிகளையும் பல்வேறு பிரிவுகளையும் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.