தமிழ்நாட்டில் முதுகலை பட்டப்படிப்பு 2025 : அரசு கல்லூரிகளுக்கு விண்ணப்பம் ( 20 – 06 – 2025 ) தொடக்கம்!
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள முதுகலை பட்டப்படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் (TNGASA PG 2025) தொடங்கப்பட்டுள்ளது.
2025-26 கல்வி ஆண்டில் 110 அரசு கல்லூரிகளில் முதுகலை படிப்பில் சேர விரும்புகிறவர்கள் இணையதளம் வழியாக ஜூலை 15-ம் தேதி வரை வழங்கப்படும் விண்ணப்பிக்கலாம்.
இந்தாண்டு மொத்தம் 24,309 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு விரும்பும் மாணவர்களை சேர்க்கும் வகையில், ஒருங்கிணைந்த இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கலந்தாய்வு நடத்தப்படுகிறது. ஆன்லைன் கலந்தாய்வின் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. அந்த வகையில், 2025-ஆம் ஆண்டு அரசு கல்லூரிகளில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம். முதுகலை படிப்புகள் வழங்கும் அரசு கல்லூரிகளில் 7 கல்லூரிகள் சென்னையில் உள்ளன.
விண்ணப்பதாரர்கள் ஒரு படிப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, அந்தந்த கல்லூரி/பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து தகுதியைச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதிகள் இல்லாத விண்ணப்பங்கள் கல்லூரிகளின் மூலம் நிராகரிக்கப்படும்.
முதுகலை படிப்பு தகுதிகள்
கலை மற்றும் அறிவியல் பாடங்களில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் முதுகலை படிப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.tngasa.in/ அல்லது https://pg.tngasa.in/ என்ற இணையதளங்களின் வழியாக விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் முதலில் பதிவு செய்து பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தின்போது விரும்பப்பட்ட கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.60 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.2 செலுத்த வேண்டும்.
மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது மொபைல் எண், இமெயில் முகவரி மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு அனைத்து செமஸ்டர் மதிப்பெண் சான்றிதழ்கள் தேவை. இணையத வசதி இல்லாதவர்கள் தேர்ந்தேடுக்கப்பட்ட அரசு கலைக் கல்லூரிகளில் உள்ள Admission Facilitation Center மூலம் விண்ணப்பிக்கலாம்.
மாணவர்களின் தரவரிசை பட்டியல் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டு, கல்லூரி அளவிலான கலந்தாய்வின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
விண்ணப்பப்பதிவு தொடங்கிய நிலையில், ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்களின் தரவரிசை பட்டியல் ஜூலை 18-ம் தேதி கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர் பட, பாதுகாப்புப் படைவீரர்கள் ஆகியவர்களுக்கான சிறப்பு கலந்தாய்வு ஜூலை 25-ம் தேதி நடைபெறும். பொது கலந்தாய்வு ஜூலை 28 முதல் தொடங்கி நடைபெறும்.
முக்கிய நாட்கள்:
விண்ணப்பம் தொடக்கம் 20.06.2025
விண்ணப்பிக்க கடைசி நாள் 15.07.2025
தரவரிசை பட்டியல் 18.07.2025
சிறப்பு கலந்தாய்வு 25.07.2025
முதல்பொது கலந்தாய்வு 28.07.2025
கல்லூரி திறப்பு 04.08.2025
வகுப்புகள் தொடக்கம் :
கலந்தாய்வின் மூலம் மாணவர்கள் சேர்க்கை அந்தந்த கல்லூரிகளின் வழியாக நடைபெற்று, ஆகஸ்ட் 4-ம் தேதி முதலாம் ஆண்டு முதுகலை மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












