கடையநல்லூர் அரசு கல்லூரியில் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு கருத்தரங்கம் !
முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த தினத்தை முன்னிட்டு இளைஞர் எழுச்சி நாள் கருத்தரங்கம் கடையநல்லூர் அரசு கல்லூரியில் 15.10.2026 அன்று நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர். பீர்முகமது கருத்தரங்கத்திற்கு தலைமை தாங்கி வளமான தேசத்திற்கு வலிமையான இளைஞர்கள் என்ற அப்துல் கலாமின் வரிகளுக்கு இணங்க இளைஞர்கள் தேச முன்னேற்றத்திற்காக கலாம் கண்ட கனவை நினைவாக்க உறுதி ஏற்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.
நாட்டிற்காக பாடுபட வேண்டும் என்றும் இக்கருத்தரங்கத்திற்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் கல்லூரி கல்வி இணை இயக்குனர் முனைவர்.சுப்பையா பாண்டியன் கலந்து கொண்டு மாணவர்கள் தோல்வியில் துவண்டு விடாமல் முயற்சியையும், பயிற்சியையும் கைவிடாமல் அப்துல் கலாம் கண்ட கனவை நினைவாக்க பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் ஆங்கிலத் துறைத் தலைவர் முனைவர். ராம் சங்கர் வாழ்த்துரை வழங்கினார்.நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர்
பால் மகேஷ் வரவேற்று பேசினார்.
முன்னதாக கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. மேலும் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அப்துல் கலாமின் திருவுருவ படத்திற்கு மலர் மரியாதை செய்யப்பட்டது. இதில் தமிழ் துறை தலைவர் முனைவர். மாரியம்மாள், ஆங்கிலத் துறை தலைவர் ராம்சங்கர்,கணிதவியல் துறைத் தலைவர் முனிவர்.மரகத கோமதி கணினி அறிவியல் துறைத் தலைவர் முனைவர். முருகன் வணிகவியல் துறைத் தலைவர் முத்து பிரகாஷ் வணிக நிர்வாகவியல் துறை தலைவர் முனைவர். பூங்கொடி வேலைவாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராஜேஷ் கண்ணா, அலுவலக கண்காணிப்பாளர் கனக சுபா நிதியாளர் திருமதி அங்கம்மாள் உட்பட அனைத்து துறை பேராசிரியர்கள் அலுவக பணியாளர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பயன்பட்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் வணிகவியல் துறை பேராசிரியர் செல்வி சையது அலி தஷீலிமா அனைவருக்கும் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியை மாணவிகள் பொன் ரேவதி, பாசிரால் ஆகியோர் தொகுத்து வழங்கினர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் பால் மகேஷ் விரிவாக ஏற்பாடு செய்திருந்தார்.












